"கூட்டத்துல மூச்சு திணறி இறந்துட்டான்.." - உறவினர் பேட்டி

x

தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் பலி - ஆதரவின்றி தவிக்கும் குடும்பம்

நீலகிரியிலிருந்து தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாட்டிற்கு சென்ற இளைஞர் உயிரிழந்ததால், அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது. கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 18 வயதான ரித்திக் ரோஷன் என்பவர் வேலைக்கு சென்று, தனது வயதான தந்தை, உடல்நிலை சரி இல்லாத தாய் மற்றும் தங்கை என மூவரையும் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் தவெக மாநாட்டிற்கு சென்ற அவர் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த ஒரே மகன் இறந்த நிலையில், ஆதரவு இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதனால் தவெக கட்சியினர் இறந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்