Gay Torture| ஓரின சேர்க்கை வெறியால் வேலையே பறிபோனது

ஓரின சேர்க்கை வெறியால் வேலையே பறிபோனது

கல்லூரி மாணவருக்குப் பாலியல் தொல்லை - மருத்துவ ஊழியர் பணிநீக்கம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பகுதி நேரமாகப் பணியாற்றிய கல்லூரி மாணவருக்கு, சக மருத்துவ ஊழியர் ஒருவர் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தித் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஓடும் பேருந்து மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் பாதிக்கப்பட்ட மாணவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, புகாருக்குள்ளான ஊழியரைத் தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com