"அழுகிறான்... நழுவுறான்..." - ராமநாதபுரத்தை திரும்ப வைத்த வைரல் போஸ்டர்
"அழுகிறான்... நழுவுறான்..." - ராமநாதபுரத்தை திரும்ப வைத்த வைரல் போஸ்டர்
இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி சார்பில் 19 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் 98 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த 98 கடைகளுக்கான டெண்டர் விண்ணப்பங்களை பொதுமக்களிடம் வாங்காமல், குறிப்பிட்ட கட்சியினரிடம் பெற்று, கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராமநாதபுரம் நகர் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில் "DD எடுத்தவன் அழுகிறான் நகராட்சி நிர்வாகம் நழுவுறான்" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. நகராட்சி நிர்வாகத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாயை கெடுக்கும் வகையில் இந்த ஏலம் அமைந்திருந்ததாகவும், உடனடியாக கடைகளின் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றிருந்தது.
