நண்பனை காக்க தயங்காமல் குறுக்கே வந்து மரணம்.. பேசிக்கொண்டிருந்த போதே விபரீதம்

x

மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மோகன்ராஜ் தனது நண்பர் சரவண பாண்டியனுடன் இந்திரா காலனி பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது, வினோத்குமார் தனது நண்பர்களுடன் கத்தி மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் மோகன்ராஜையும், தடுக்க சென்ற சரவண பாண்டியனையும் மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். இதில் சரவணபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்