Pondicherry | 35 பெண்களுடன் உல்லாசம் - மிரள விட்ட வீடியோ ஆதாரங்கள்.. தட்டி தூக்கிய போலீஸ்

x

புதுச்சேரியில், சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மேற்கு வங்கத்தை சேர்ந்த நபரை, ஒடிசா மாநிலம் சென்று போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க பெண் ஒருவர் அளித்த புகாரில், தனது 15 வயது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்கள், உடன் பணிபுரிபவர்களுக்கு யாரோ அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஒடிசாவில் பதுங்கியிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், திருமணம் செய்ய சிறுமி மறுப்பு தெரிவித்த‌தால், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்த‌ரித்து பரப்பியது தெரிய வந்த‌து. மேலும் 35க்கும் மேற்பட்ட பெண்களிடம் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த‌தும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்