5 ஸ்டார் ஹோட்டலா.? ஆசிரமமா.? - 121 பேரின் உயிரை பறித்த சாமியாரின் சொத்து மதிப்பு இவ்வளவா.?

உத்தரப்பிரதேசத்தில், சாமியார் போலே பாபா தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்த நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் சாமியார் பெயர் இடம்பெறாத நிலையில், அவர் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 13 ஏக்கரில், சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று சொகுசு ஆசிரமத்தை கட்டியதும் தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com