

1000 டன்னுக்கும் மேலாக மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பாதுகாப்பான முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் முழு கவனம் செலுத்த உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் தனியாக ஆக்சிஜன் பிரிவு அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.