"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முன்மாதிரியாக அமையும்" - மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முன்மாதிரியாக அமையும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முன்மாதிரியாக அமையும்" - மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
Published on

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முன்மாதிரியாக அமையும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரைக்கு வருவதில் பெருமை அடைவதாக கூறினார். ராமநாதபுரம், விருதுநகர் பகுதியில் நடைபெற உள்ள புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்த அவர், 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தமிழகத்துக்கு பரிசளித்துள்ளார் என்றார். மதுரையில் சிறந்த மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என்ற அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் நிதி வழங்கியுள்ளது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com