Hariyana | Diwali Gifts | "அடேங்கப்பா! இப்படி ஒரு தீபாவளி பரிசா" இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி
ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 51 சொகுசு கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த எம்.கே. பாட்டியா என்பவர், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதுபோன்று காஸ்ட்லியான பரிசை அளித்துள்ளார். ஊழியர்களே தனது மருந்து நிறுவனங்களின் முதுகெலும்பு என்று தெரிவித்துள்ள அவர், கடின உழைப்பு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தங்கள் வெற்றியின் அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் முயற்சிகளை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிப்பதே தனது ஒரே குறிக்கோள் என்றும் எம்.கே. பாட்டியா கூறியுள்ளார்.
Next Story
