குடும்பமாக குவிந்த சுற்றுலா பயணிகள்.. இயற்கையை ரசித்து புத்தாண்டை கொண்டாடும் மக்கள் | Holiday

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்திற்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வருகை தந்தனர்.

கோவையின் முக்கிய இடமாகத் திகழும் ஈஷா யோகா மையத்திற்கு புத்தாண்டை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் அங்குள்ள தியானலிங்கம் மற்றும் ஆதியோகி சிலையை தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு சென்று வரும் ஐயப்ப பக்தர்களும், ஓம் சக்தி கோயிலுக்கு சென்று வரும் பெண் பக்தர்களும் ஈஷா யோகா மையத்தில் தரிசனம் செய்து சென்றனர். மேலும், ஆதியோகி சிலை முன்பாக குடும்பத்துடனும் நண்பர்களுடன் அவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com