9 வது நாளாக போராட்டம்.. கைதான 1000+ மக்கள்.. தென்காசியில் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு ஒன்பதாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வேலை நிறுத்த போராட்டத்தால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com