கைத்தறி - துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரெய்டு

ஈரோட்டில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கைத்தறி - துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரெய்டு
Published on
ஈரோடு - பவானி சாலையில் உள்ள அசோகபுரத்தில் கைத்தறி மற்றும் துணி நுால் துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்த றியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நுால் அனுப்பி வைப்பது, உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கான கூலி வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் உள்ள தனி அலுவலர்கள் உள்ளிட்ட கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் இட மாறுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் இங்கு தான் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கு இந்த அலுவலகத்தில்தான் கூலி வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீஸார் 3 பிரிவுகளாகப் பிரிந்து கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com