குட்கா வழக்கு : பெண் எஸ்.பி நேரில் ஆஜர்

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராகியுள்ளார்.
குட்கா வழக்கு : பெண் எஸ்.பி நேரில் ஆஜர்
Published on
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராகியுள்ளார். குட்கா விற்பனை மூலம் 639 கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட 12 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத் துறையின் துணை இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார். குட்கா முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் மாதவரம் காவல் துணை ஆணையராக விமலா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com