குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் மற்றும் அமலாக்கத்துறை இய​க்குநர் ஷெரோன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நேற்று இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாக இருவரிடமும் காலை 10.30 முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com