கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக 2 இளைஞர்களை 2 பேர் கத்தியால் துரத்தி வெட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக 2 இளைஞர்களை 2 பேர் கத்தியால் துரத்தி வெட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Published on

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக அதே முகாமைச்சேர்த்த 2 இளைஞர்களை 2 பேர் கத்தி மற்றும் கடபாரை கொண்டு ஓட, ஓட துரத்தி வெட்டும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் கடந்த

சில நாட்களுக்கு முன்னர் முன் முன்விரோதம் காரணமாக முகாமைச்சைர்ந்த

2 இளைஞர்களை அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் பட்டா கத்தி மற்றும் கடப்பாரையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதில் பால்ராஜ் (29) பத்மநாபன் (28) ஆக இருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இவர்களுக்கு 10- க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்களும் கால் முறிவும் ஏற்பட்டு உள்ளது.

பலத்த காயம் அடைந்த மேற்கண்ட 2 பேரும் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வெறி தாக்குதலை நடந்திய முகாமைச்சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற வெள்ளையன் மற்றும் சரத் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர் .

X

Thanthi TV
www.thanthitv.com