Guindy Doctor Issue | தமிழகமே நடுங்கிய சம்பவம்..ஞாபகம் இருக்கா.. இந்த டாக்டருக்கு புதிய பொறுப்பு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவருக்கு புதிய பொறுப்பு
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பிய மருத்துவருக்கு, புதிய பொறுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2024ல் கேன்சர் நோயாளியான தன் தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி, இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தினார். பின்னர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி, உடல்நலம் தேறி மீண்டும் பணிக்கு திரும்பினார். ஆனால், தன்னால் தொடர்ந்து மருத்துவம் பார்க்க முடியவில்லை என தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு, அவரை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
