குடியாத்தத்தில் இடியுடன் கன மழை: இடி தாக்கியதில் முதியவர் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
குடியாத்தத்தில் இடியுடன் கன மழை: இடி தாக்கியதில் முதியவர் பலி
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஜீட்டப்பல்லி கிராமத்தில் பூப்பூன் என்ற முதியவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். கன மழை பெய்து கொண்டிருந்ததால் அருகில் இருந்த பனை மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com