"ஆகாயத்தில் இருந்து பயம் கலந்த மகிழ்ச்சியுடன் இயற்கையை ரசித்தோம்.." - சுற்றுலா பயணிகள் பேட்டி

"ஆகாயத்தில் இருந்து பயம் கலந்த மகிழ்ச்சியுடன் இயற்கையை ரசித்தோம்.." - சுற்றுலா பயணிகள் பேட்டி
Published on

கூடலூர் அருகே துவங்கப்பட்டுள்ள மலை குன்றுகளுக்கு நடுவே பயணிக்கும் "zipline" சுற்றுலா, பயணிகள் இடையே வரவேற்றை பெற்றுள்ளது.கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் அந்தரத்தில் தொங்கியபடி பயணித்து மலை குன்றுகளை ரசிக்கும் shipline எனப்படும் சாகச சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சாகச சுற்றுலாவில் ஒரு கிலோமீட்டர் தூரத்தை மூன்று நிமிடங்களில் கடக்க முடியும் என்றும் அதில் பங்கேற்க ஒருவருக்கு 300 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள "zipline" சுற்றுலாவில் பங்கேற்றது அலவில்லா மகிழ்ச்சியை கொடுத்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com