மின்சாரம் தாக்கி காவலாளி பலி - உயிரை பறித்த போக்குவரத்து சிக்னல் கம்பம்
சென்னையில் போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் உள்ள மின்சாரம் தாக்கி காவலாளி ஒருவர் பலியானார்.
சென்னையில் போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் உள்ள மின்சாரம் தாக்கி காவலாளி ஒருவர் பலியானார். சென்னை திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்த பிறகு மந்தவெளி பேருந்து டிப்போ அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கே தேங்கிய மழை நீரில் அவர் கால் வைத்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. போக்குவரத்து மின்கம்பத்தில் உள்ள சிறிய மின்பெட்டியில் இருந்து வந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்ததாக கூறப்படும் நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
