GRT Jewellers | Diwali Offers | தீபாவளி ஸ்பெஷல் - அசத்தல் சலுகைகளை அறிவித்த ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ்
தீபாவளியை முன்னிட்டு ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளது... தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்கு சமமான எடையுள்ள வெள்ளியை முற்றிலும் இலவசமாக பெறுவார்கள் என்றும், தங்க நகைகளுக்கு கிராமுக்கு 100 ரூபாய் குறைவாக கிடைக்கும் எனவும், இந்த சலுகை தமிழகத்தில் தங்க தீபாவளி என்ற பெயரில் முன்னெடுத்து நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைர நகைகளுக்கும் அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பேசிய ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் 'ஆனந்த்' அனந்த பத்மநாபன், இந்த ஆண்டும் அற்புதமான பண்டிகை கால சலுகைகளுடன் தங்கள் மரபை தொடர்வதில் மகிழ்ச்சி என தெரிவித்தார். “கோல்டன் லெவன் ஃப்ளெக்சி“ நகை சேமிப்புத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ராதா கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
Next Story
