GRT Group | ஜி.ஆர்.டி குழுமம் சார்பில் 1000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
GRT Group | ஜி.ஆர்.டி குழுமம் சார்பில் 1000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஜி.ஆர்.டி குழுமம் சார்பில் 1000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஜி.ஆர்.டி குழுமம் சார்பில் 1000 மாணவர்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டமாக 271 மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது... ஜி.ஆர்.டி குழுமத்தின் "கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்" கீழ், நடப்பு ஆண்டில், 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்... மேலும் கடந்த மாதம் 20ம் தேதி திருத்தணி ஜி.ஆர்.டி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது... இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக 271 மாணவ-மாணவிகளுக்கு, ஜி.ஆர்.டி குழுமத் தலைவர் ஜி.ஆர். ராஜேந்திரன் கல்வி உதவித்தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜி.ஆர்.டி நிர்வாக இயக்குநர் அனந்த பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
