

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்திருந்தது. இவர்களுக்கு பதிலாக, தகுதி வாய்ந்தவர்கள் தர வரிசை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, புதிய தேர்வர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. இந்த 39 பேரும், தங்களுடைய சான்றிதழ் நகல்களை, வரும் 7 ம் தேதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தி உள்ளது. 99 பேரில், மீதமுள்ள 60 பேரின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.