தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 போட்டித் தேர்வு - முக்கிய அறிவுறுத்தல்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 935 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு இன்று காலை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சம் பெண்கள் உட்பட 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் தேர்வு நடைபெறும் நிலையில், தலைநகர் சென்னையை பொறுத்தவரை 311 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன்படி, காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கும் சென்று விட வேண்டும். 9 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வு நடைபெறும் மையங்களில் மின்தடை இருக்கக்கூடாது என்று மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
