Homosexual| ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி இளைஞருக்கு விபரீதம் - எடப்பாடியில் `கிரிண்டர்’ சம்பவம்
ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி இளைஞருக்கு விபரீதம் - எடப்பாடியில் `கிரிண்டர்’ சம்பவம்
#grindr #homosexual
எடப்பாடியில் கிரிண்டர் செயலி மூலம் வந்த நபரை தாக்கி நகை, பணம் பறிப்பு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றங்கரை மயானப் பகுதிக்கு, 'கிரிண்டர்' (Grinder) செயலி மூலம் வந்த அழைப்பை ஏற்றுச் சென்ற இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கூட்டு சேர்ந்து தாக்கி, அவரிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் மற்றும் வெள்ளி அரைஞான் கொடியைப் பறித்துச் சென்றனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கார்த்திக், பிரவீன் குமார், வீரப்பன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
