வாட்ஸ்-அப், இன்ஸ்டா வருகையால் மறையும் வாழ்த்து அட்டைகள்

x

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க... ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியில் உதடுகள் சிரிக்க... ஒளிந்து, ஒளிந்து காதல் கடிதம் எழுதிய தருணம் அத்தனை அழகானது.

தெய்வீக காதல், பருவ காதல், கண்டதும் காதல், காணாமலே காதல், பேசா காதல் என எல்லாக் காதலுக்கும் ஆரம்பம் அது.

கவிதை பொழியும் ஆயிரம் கடிதங்கள் எழுதினாலும் வண்ண வண்ண வாழ்த்து அட்டைகளை அனுப்புவது அந்தகால காதலின் அடுத்தக்கட்டம்.


80, 90-களில் ரோஜா பூ வாழ்த்து அட்டைகள், இதயம் பறக்கும் வாழ்த்து அட்டைகள்... இசை ஒலிக்கும் வாழ்த்து அட்டைகள், கவிதைகள் அடங்கிய பல வண்ண வாழ்த்து அட்டைகள் எல்லாம் கடைகளை அலங்கரிக்கும். அதில் புதியது தேடி பரிசாக கொடுப்பதே தனி சுகம்...

காதலுக்காக வீட்டில் அடி வாங்கிய தருணம் நெஞ்சோடும் இடம்பிடிக்கும் அந்த வாழ்த்து அட்டைகள்.

சேர்த்து வைத்த அட்டைகளை பார்க்கும் போது எல்லாம் பரவசமாகும்.

இன்றைய இன்டர்நெட் உலகில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், பேஸ்புக் காதலுக்கு தூதுவிடவும், காதலை தெரிவிக்கவும் முக்கிய தளமாகிவிட்டன.

கடை கடையாய் அட்டைகளை தேடிய காலம் போய், கூகுளில் அட்டைகளை தேடி, இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் காலமாகிவிட்டது.

இதனால் காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்பனை குறைந்துவிட்டதாக சொல்கிறார் இன்றும் அட்டைகளை விற்கும் ஹரிபாபு


இருப்பினும் என்றும் காதல் நினைவுகளை சுமந்து செல்லும் 80ஸ், 90ஸ் கிட்ஸ் காதலர்கள், இன்றும் கடைகளை தேடி, வாழ்த்து அட்டைகளை வழங்குவதை தொடரத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் பேச்சு எல்லாம்... காதலும்... காதலர் தின அட்டையும் பிரிக்க முடியாது என்பதுதான்...

இன்ஸ்டாகிராம் போஸ்ட் அன்றைக்கு மட்டும்தான், காதலர் தின காகித அட்டைகள் என்றைக்கும் உணர்வாக இருக்கும் என்கிறார்கள்.


தொழில்நுட்ப வளர்ச்சியில் தூதுவிடல் மாறும் என்றாலும், எப்போதும் பொக்கிஷமாய் நம்மோடே உணர்வுகளை தாங்கியிருக்கும் வாழ்த்து அட்டைகளுக்கும் உயிர் கொடுப்போமே....

தந்தி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் நெப்போலியன் உடன் செய்தியாளர் தாயுமானவன்


Next Story

மேலும் செய்திகள்