ரேஷன் கார்டு அட்டையில் இருந்த போட்டோவால் பேரதிர்ச்சி

x

ரேஷன் கார்டு மின்னணு அட்டையில்,மதுபாட்டில் புகைப்படம் !

மதுரை அருகே ரேஷன் கார்டு மின்னணு அட்டையில், மது பாட்டிலின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரையூர், தாலுகா சின்னபூலாம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில, அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்தார். இதற்காக நல வாரிய அலுவலகத்திற்கு பதிவு செய்ய சென்ற நிலையில், ரேஷன் கார்டு மின்னணு அட்டையில் மனைவியின் புகைப்படத்திற்க பதிலாக,மது பாட்டிலின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதனை பார்த்த நலவாரிய அலுவலர்கள், முறைப்படி ரேஷன் கார்டை பதிவு செய்ய முடியாது என திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்