வந்தாச்சு சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்..மெட்ரோவுடன் இணையும் பறக்கும் ரயில்
சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஓப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் எம்.ஆர்.டி.எஸ். (MRTS) இணையத்தை, மெட்ரோ ரயிலுடன் இணைக்க மெட்ரோ நிர்வாகம் மற்றும் ரயில்வே இடையேயான நிதி, நிர்வாக பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்யக்கூடிய ஒருங்கிணைந்த வசதி அமல்படுத்தப்படவுள்ளது. மேலும் வேளச்சேரி வழித்தடத்திலிருந்து நேரடி மெட்ரோ பயணம் மேற்கொள்ளும் வகையிலான இந்த திட்டம் 2026ம் ஆண்டு நிறைவு பெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story
