உடைந்த காலோடு மூதாட்டியை தூக்கி ஓடி வந்த பேரன்.. பரபரப்பு

x

மருத்துவ உதவி கேட்டு மூதாட்டியை தூக்கி வந்த பேரன்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கேட்டு கால் உடைந்த மூதாட்டியை பேரன் கலெக்டர் அலுவலகத்திற்கு தூக்கி வந்தார்.

வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த பீம கவுண்டருக்கு இரண்டு மனைவிகள். கணவரும், முதல் மனைவியும் இறந்து விட, ரத்தினம்மாளுக்கு கீழே விழுந்து கால் உடைந்துள்ளது. மகன்கள் கைவிட்ட நிலையில், பேரன் மோகன் தனது பாட்டியின் மருத்துவ வசதிக்கு உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்