101வது பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய பாட்டியம்மா -தடல்புடலாக கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 101 வயது மூதாட்டியின் பிறந்தநாளை குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். கடலையூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பாக்கியம் என்பவர் இந்த ஆண்டு தனது 101வது பிறந்தநாளை கொண்டாடினார். நான்கு தலைமுறைகளைக் கண்ட மூதாட்டி பாக்கியத்தின் பிறந்த நாளை அவரது குடும்பத்தினர், ஆங்காங்கே டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகள் வைத்து, பிரியாணி விருந்தோடு திருமண மண்டபத்தில் தடபுடலாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story
