Grandfather Murder | 84 வயது தாத்தாவின் மர்ம உறுப்பை அறுத்து ஆசிட் ஊற்றி கொன்ற கொடூர பேரன்
தாத்தாவின் மர்ம உறுப்பை துண்டித்து கொடூரமாக கொலை செய்த பேரன் கைது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 84 வயது முதியவரின் மர்ம உறுப்பை துண்டாக வெட்டி, அவர் மீது ஆசிட் ஊற்றி பேரனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூனுகபட்டு கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடிஎன்பவர், மனைவி செல்வி, சௌந்தர், சுதர்சன், தர்மேஷ் ஆகிய 3 மகன்கள் மற்றும் தந்தை சாரங்கபாணியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர் தனது பாட்டியின் புகைப்படத்தை எரிக்க முயன்றதாகவும், அதை சாரங்கபாணி தடுத்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர் மீது ஆசிட் வீசி, அரிவாளால் பல இடங்களில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது... பின்னர் தாத்தாவின் மர்ம உறுப்பை வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாரங்கபாணி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் பொறியியல் பட்டதாரியான சௌந்தர், வேலை மற்றும் பணம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், பெங்களூருவிலிருந்து ஆரணிக்கு நடந்தே வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சௌந்தரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
