Maha Deepam | மகா தீபத்திற்கான பிரம்மாண்டம்.. 1,000 மீட்டர் காடா துணிக்கு சிறப்பு பூஜை
மகா தீபத்திற்கான பிரம்மாண்டம்.. 1,000 மீட்டர் காடா துணிக்கு சிறப்பு பூஜை
மகா தீபத்திற்கான பிரம்மாண்டம்.. 1,000 மீட்டர் காடா துணிக்கு சிறப்பு பூஜை #Tiruvannamalai #MahaDeepam மகா தீபத்திற்கான 1,000 மீட்டர் காடாத் துணிக்கு சிறப்பு பூஜை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மகா தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மகா தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் 1,000 மீட்டர் காடாத் துணி, மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் வைக்கப்பட்டது. சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு அந்தத் துணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரும் 24-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 2,668 அடி உயர தீபமலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இதற்காக காடாத் துணியும், தீபக் கொப்பரையும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன.
