கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம் - திரண்ட பக்தர்கள்
கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம் - ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
கரிம்பேடு நாதாதீஸ்வரர் திருக்கோவிலில்,13 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கரிம்பேடு கிராமத்தில் உள்ள நாதாதீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழாவை ஒட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புனித நீரால் கோவில் கலசத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
