3-ம் படைவீட்டில் முருகனுக்கு கோலாகல தேரோட்டம் - விண்ணை கிழித்த "அரோகரா" கோஷம்..

x

3-ம் படைவீட்டில் முருகனுக்கு கோலாகல தேரோட்டம் - விண்ணை கிழித்த "அரோகரா" கோஷம்.. திரண்ட பக்தர்கள்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் விசாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தோரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரோகரா கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலை வெங்கடாஜலபதி கோயிலிலும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரில் எழுந்தருளிய சுவாமி, கிரிவலப்பாதையில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடேஸ்வர சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், தேரோட்டம் நடைபெற்றது. பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பெருமாள் கோயில் தேரோட்டத்தில் சாமி சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த நி​லை​யில் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்கதர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்