கோவளத்தில் பிரமாண்ட பீச் கிரிக்கெட்

x

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் பிரமாண்ட பீச் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்த மூன்றாவது சுற்றில், எஸ் டி எஸ் பவுண்டேஷன் அணி வெற்றி பெற்றது. தற்போது 4வது சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்த சுற்றின் இறுதியில் 18 அணிகளுக்கு பரிசுத்தொகை உடன் கூடிய கோப்பை வழங்கப்பட உள்ளது. போட்டியில் வீரர்கள் ஃபோர் (four), சிக்ஸர் அடிக்கும் போதும், விக்கெட் விழும் போதும் சியர்ஸ் கேர்ள்ஸ் (cheers girls) நடனமாடுவது பார்வையாளர்களை உற்சாகமூட்டியது. கடற்கரையில் 10 கேமராக்கள் பொருத்தப்பட்டு கிரிக்கெட்டி போட்டியை யூடியூபில் பார்க்கவும் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் ஏற்பாடு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்