கொஞ்சம் கொஞ்சமாக நாய் போலவே மாறிய அதிர்ச்சி - தமிழகத்தை நடுங்க வைத்த இளைஞர் மரணம்
கொஞ்சம் கொஞ்சமாக நாய் போலவே மாறிய அதிர்ச்சி - தமிழகத்தை நடுங்க வைத்த இளைஞர் மரணம்
உஷார்..உஷார்..உஷார்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பக்கத்துல, நாய் கடிச்சத ரொம்ப நாளா கவனிக்காம இருந்த இளைஞர், பரிதாபமா ரேபிஸ் பாதிப்புக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்த ஏற்படுத்தியிருக்கு. உயிரை கொல்லும் ரேபீஸ் வைரஸ் பாதிப்புக்கு முக்கிய காரணியா, நாய்க்கடி இருக்கும் சூழல்ல, நாய் கடிச்சு ரேபீஸ் பாதிப்பு ஏற்பட்டா என்ன நடக்கும்? நாம என்ன செய்யனும்னு விரிவா பார்க்கலாம்.
ஓசூர், தின்னூர் கிராமத்த சேர்ந்த 23 வயது இளைஞர் எட்வின் பிரியன். MBA படித்த இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்துல வேல பார்த்துட்டு வந்துருக்காரு. சில நாட்களுக்கு முன்னாடி, அவர நாய் கடிச்சதா சொல்லப்படுது. எட்வின் பிரியன் நாய் கடிச்சத வீட்டுல யார்கிட்டையும் சொல்லாம, சிகிச்சை எடுக்காம இருந்ததாவு சொல்லப்படுது. புதன்கிழமை எட்வின் பிரியனோட உடல்ல திடீர்னு பல மாற்றம் ஏற்பட்டுருக்கு. அதாவது ரேபீஸ் வைரஸ் தொற்று முற்றிய அறிகுறிகள் தென்பட்டுருக்கு . எச்சில் துப்புவது, சத்தம் போடுவதுமா இருந்த ,எட்வின் பிரியன் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கக்கதாசம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர கொண்டு போய்ருக்காங்க. அங்க சிகிச்சையளிச்சும் சரியாகாததால உறவினர்கள் தளி தனியார் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய்ருக்காங்க. அங்க எட்வின் பிரியன நாய் கடிச்சுருப்பதா மருத்துவர்கள் சொல்லிருக்காங்க. இத தொடர்ந்து தளி அரசு மருத்துவமனையில அவருக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுருக்கு. அப்புறம் மேல் சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர், தூங்கியவாறே உயிரிழந்தார். நாய் கடிச்சத நீண்ட நாட்களா கவனிக்காம இருந்த எட்வின் பிரியன் உயிரிழந்தது பெரும் சோகத்த ஏற்படுத்தியிருக்கு.
இதையடுத்து இளைஞருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள், செய்தி சேகரிக்க சென்ற செய்தியார்கள் மற்றும் அவர சுற்றியிருந்தவர்கள்னு 30க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுருக்கு.
