ஜிபேயில் இது வந்தால் உஷார் - இவர்கள் மட்டுமே குறி | Chennai

தொழில் புரியும் நபர்களை குறிவைத்து ஜிபே மூலம் நூதன மோசடி செய்யும் சைபர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த பெண் அழகு கலை நிபுணர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ராணுவ வீரர் என அறிமுகப்படுத்திக் கொண்டு செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், தங்கையின் திருமணத்திற்கு மணப்பெண் அலங்காரம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான தொகையை எவ்வளவு என கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறியபோது, அந்த நபர் தனது ஜிபே எண்ணிற்கு ஒரு ரூபாய் பணத்தை அனுப்பியதாகவும், ஆனால் அதில் லிங்க் ஒன்று வந்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த லிங்க்கை கிளிக் செய்திருந்தால் தனது வங்கிக் கணக்கை கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததை அறிந்து உஷாரானதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com