``வண்டிய ஸ்டேஷனுக்கு விடுறா போவோம்'' - அரசு பஸ்ஸில் அதிர்ச்சி
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து நடத்துனருக்கும், பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளங்கி செல்லும் நகரப்பேருந்தில் ஏறிய அலெக்ஸ் என்பவர், தனது மனைவியும் குழந்தையும் வருவதால் பேருந்தை சற்று நிறுத்துமாறு கோரிய நிலையில், பேருந்தை நிறுத்த மறுத்த நடத்துனர், அலெக்ஸை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து இருவருக்கும் தகராறு நீடித்த நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story
