Govt Staff | அரசு அலுவலகத்தில் அரசு ஊழியரை விரட்டி விரட்டி கண்மூடித்தனமாக தாக்கிய போதை கும்பல்

அரசு அலுவலகத்தில் அரசு ஊழியரை விரட்டி விரட்டி கண்மூடித்தனமாக தாக்கிய போதை கும்பல்

#govtstaff #drunkard தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் நீர்வளத்துறை அலுவலத்தில் மது அருந்துவதை தடுத்த, அரசு ஊழியர்கள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாச்சியார் கோவில் பகுதியில் உள்ள நீர்வளத் துறை அலுவலகத்தில், போதை ஆசாமிகள் மது அருந்துவது வழக்கம் என கூறப்படுகிறது. போதை ஆசாமிகள் நுழைவதை தடுக்க அலுவலக வளாகத்தை ஊழியர்கள் பூட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள், நீர்வளத் துறையின் ஊழியர்களான கீர்த்தி வாசகன் மற்றும் பாஸ்கர் ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com