Govt Bus | Salem News | ``அய்யோ.. முகத்த பாக்கவே முடியலயே’’ - 4 வயது பிஞ்சுக்கு நேர்ந்த அதிபயங்கரம்

x

அரசு பேருந்து மோதி விபத்து - 4 வயது குழந்தை தலை நசுங்கி பலி

சேலத்தில் சாலையை கடக்க முயன்ற தந்தை மற்றும் குழந்தை மீது அரசு பேருந்து மோதியதில் நான்கு வயது குழந்தை தலை நசுங்கி உயிரிழந்துள்ளது.

குரங்குசாவடி பகுதியில் குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், நான்கு வயது குழந்தை தலை நசுங்கி பலியான நிலையில், தந்தை படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்