ஆளுநர் நியமனம் - கே.எஸ்.அழகிரி சந்தேகம்

ஆளுநர் நியமனம் - கே.எஸ்.அழகிரி சந்தேகம்

ஆளுநர் நியமனம் - கே.எஸ்.அழகிரி சந்தேகம்

காவல்துறை பின்புலம் கொண்டவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி, புலனாய்வு குழு மற்றும் தேசிய பாதுகாப்புதுறையில் பணியாற்றியவர் என்றும்,முழுக்க முழுக்க காவல்துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர் மூலம் மத்திய அரசு இடையூறு செய்த‌தாக குற்றம்சாட்டியுள்ள அவர்,புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடியை நியமித்து, காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.இதேபோல், தமிழகத்தில் திமுக அரசுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே, புதிய ஆளுநரை நியமித்து இருக்கிறது என சந்தேகப்படுவதாக கூறியுள்ள கே.எஸ்.அழகிரி,தமிழக ஆளுநர் பதவியை ஆயுதமாக பயன்படுத்த முயன்றால், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் போராட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com