திருக்குறள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு கருத்து

x

திருக்குறள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு கருத்து

தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டது திருக்குறளில் இருந்துதான் என்றும் ஆனால் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடும் மாநிலம் அதனை ஏற்க மறுக்கிறது என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். மேலும், திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்திற்குள் சுருக்கி விட முடியாது என்றும் கூறியுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் திருவள்ளுவர் திருநாட் கழகம் சார்பில்

திருவள்ளுவர் திருநாள் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சில திருக்குறள்களை குறிப்பிட்டு , அவை குறிப்பிடும் அறிவுரையை தான் சனாதான தர்மமும் சொல்கிறது என்றும் பிரதமர் மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர் என்றும் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்