ஆளுநர் மாளிகையை சொந்தம் கொண்டாடிய நபரால் பரபரப்பு

பாபு என்பவர், ஆளுநர் மாளிகை எதிரே நின்று கொண்டு, அது தன்னுடைய குடும்பத்துக்கு சொந்தமானது என உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
ஆளுநர் மாளிகையை சொந்தம் கொண்டாடிய நபரால் பரபரப்பு
Published on

சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த பாபு என்பவர், கிண்டியில்

உள்ள ஆளுநர் மாளிகை எதிரே நின்று கொண்டு, அது தன்னுடைய குடும்பத்துக்கு சொந்தமானது என உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் பலமுறை சொல்லியும், பாபு அங்கிருந்து செல்ல மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் பாபுவை அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் பாபுவை அரசு மனநல காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com