பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு கட்டளை போட்ட ஆளுநர்

x

பட்டமளிப்பு விழா - மாணவர்களுக்கு கட்டளையிட்ட ஆளுநர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 43 ஆயிரத்து 163 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில், 314 பேர் ஆளுநரிடம் நேரடியாக பட்டங்களை பெற்றனர். முன்னதாக, பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி மரக்கன்றுகளை நட்டார். ஆளுநருடன், மாணவர்களும் மரக்கன்றுகளை நட்ட நிலையில், மரம் நடுவதுடன் நின்று விடாமல் வாரந்தோறும் அதன் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அன்பு கட்டளையிட்டார். இவ்விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்