"அரசு வேலை வாங்கி தரேன்" ஆசையாக இருந்த ஊர் மக்கள்... அல்வா கொடுத்த பெண்
சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 2 கோடி ரூபாய்க்கும் மேல், ஒரு பெண் மோசடி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கெங்கவல்லி நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அரசு பணிகளை பெற்றுத் தருவதாக, பலரிடமும் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பிறகு பலரிடமும் பெற்ற பணத்தை, சீட்டு உள்ளிட்டவையில், முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், பணத்தை இழந்த பொதுமக்கள் பலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளனர்.
