21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், அறிவியல் ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோத்தகிரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். அவர் பணியாற்றி பள்ளியில் பாலியல் கல்வி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது, செந்தில்குமார் மீது 6ஆம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில், செந்தில்குமார் தனக்கும் மேலும் 20 மாணவிகளுக்கும், தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தெரிவித்துள்ளார். இதையடுத்து, செந்தில்குமரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் செந்தில்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.