Students Attack Teacher | ஆசிரியரை கற்களால் தாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்?

x

போதையில் ஆசிரியரை கற்களால் தாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்?

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதுடன், ஆசிரியரை

கற்களால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருட்கள் பயன்படுத்திய நிலையில், மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற ஆசிரியர் ஒருவரையும் மாணவர்கள் கற்களால் தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுத்து, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்