காதலி அனுப்பிய ஆபாச வீடியோ அதிர்ந்து போன அரசு அதிகாரி

அரசு அலுவலரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பெண் கைது

திண்டுக்கலில் ஆசைவார்த்தை கூறி அரசு அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நத்தம் சாலையில் வசித்து வரும் அரசு அதிகாரியும், சின்ன அய்யங்குளத்தை சேர்ந்த ரீத்தா என்பவரும் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை, குடும்பத்தினருக்கு அனுப்புவதாக மிரட்டி, அரசு அதிகாரியிடம், ரீத்தா பணம் பறித்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாடிக்கொம்பு போலீசார், ரீத்தாவை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com