அரசு மருத்துவமனை செவிலியர், கணவர் தூக்கிட்டு தற்கொலை

x

சென்னை பழவந்தாங்கல் பகுதியயை சேந்தவர் அசோகன் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புனிதா ஓமந்தூரார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களாக அசோகன் மற்றும் புனிதா வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் வீட்டில் துற் நாற்றம் வீசத்தொடங்கியதால் வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தனர். பின்னர் உடலை கை பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்