

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தில், குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள், நீரில் மூழ்கி
உயிரிழந்தனர். பிரவீனா, சிவசக்தி, வேதிகா, கீர்த்திகா ஆகிய 4 சிறுமிகள் குளத்தில் குளிக்கச் சென்றபோது, திடீரென அவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர். உயிருக்கு போராடிய சிறுமிகளைக் கண்ட சிலர், அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேதிஷாவும், கிருத்திகாவும் உயிருக்கு போராடி வரும் நிலையில், சிவசக்தி, பிரவீனா என்ற சிறுமிகள் உயிரிழந்தனர்.