அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

அரசு மருத்துவமனைகளில் பேராசிரியர்கள், உதவி பேராசியர்கள் என பணிபுரிந்து வரும் 860 பேரை, பணியிட மாற்றம் செய்ய மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியது.இதற்கான கலந்தாய்வு, ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த அரசு மருத்துவர்கள் சரவண ப்ரியா மற்றும் நிம்மி சிவகுமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தபோது, கலந்தாய்வு முறையான விதிகளை பின்பற்றி நடக்கவில்லை என்றும் மூத்த மருத்துவர்கள் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அரசு மருத்துவர்களின் பணியிட மாற்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com